×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோனியா காந்தி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தலைவர்கள் பலரும் அக்கரை தெரிவித்துள்ளனர்.

 

The post காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Congress ,Sonia Gandhi ,Delhi ,Congress party ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...