×

காரைக்குடி அருகே கண்மாயை மூடி சாலை அமைக்க எதிர்ப்பு

சிவகங்கை : காரைக்குடி அருகே பாதரக்குடியில் கண்மாயை மூடி சாலை அமைப்பதற்கு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது. சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தனபாலன், ஆர்டிஓ சுகிதா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காளையார்கோவில் தாலுகா சாத்தணியில் ஏழை குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்களை முறைப்படி வருவாய்த்துறை நிர்வாகம் பட்டா மாற்றி நில அளவை செய்து வழங்க வேண்டும். கீழப்பசளை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்து நகையை இழந்து நிற்பவர்களுக்கு மீண்டும் நகைகளை வழங்க வேண்டும்.

காரைக்குடி அருகே பாதரக்குடியில் கண்மாயை மூடி சாலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கண்மாயை மூடினால் 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கும். விவசாயத்தை பாதிக்கச்செய்யும் இச்செயலை செய்தால் நீர் இல்லாமல் கடும் பாதிப்பு ஏற்படும். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். சருகணியாற்றில் ஆற்றுப் பகுதியில் போடப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மற்றும் சாலையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் பேசினர். கலெக்டர் ஆஷாஅஜித் பேசும் போது, சாலையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மடைகள் பழுது நீக்கம் செய்து கண்மாயை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள்
குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post காரைக்குடி அருகே கண்மாயை மூடி சாலை அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kanmayai Muddy road ,Karaikudi ,Sivagangai ,Badarakudi ,Sivagangai… ,Kanmayai Muddy ,Dinakaran ,
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம்...