×

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார், ஆர்டிஓ விசாரணை

கம்பம், செப். 3: சேலம் எடப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் ராஜா, நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினிக்கும் (24), கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் கிருஷ்ணராஜாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வந்துள்ளது. இது குறித்து ஷாலினி அவரது தாயாரிடம் போன் செய்து கூறியுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணராஜா, ஷாலினிக்கு தெரியாமல் ரூ.3000 கடனாக வாங்கி உள்ளார். இதனால் அன்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஷாலினி, அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.

இதனால் கிருஷ்ணராஜா, அருகில் குடியிருப்பவர்களின் உதவியுடன் கதவை உடைத்து, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையிலிருந்த ஷாலினியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றுள்ளனர். ஷாலினியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணராஜா ஷாலினியின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இறந்த ஷாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷாலினியின் தந்தை ராஜா கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுக்குமாரி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 8 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளது குறித்து உத்தமபாளையம் ஆர்டிஓ பால்பாண்டியன் ஷாலினியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

The post திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார், ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Kampham ,Raja ,Salem Edappadi Vellandiwalas ,Shalini ,Dinakaran ,
× RELATED திருப்பூர் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் இட நெருக்கடியால் பொதுமக்கள் அவதி