×

கண்டமனூர் அருகேசன்னாசி வலசலிங்கம் கோயில் கும்பாபிஷேகம்

வருசநாடு, செப். 3: கண்டமனூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் சன்னாசி வலசலிங்கம் கோயிலில் 2ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக சன்னாசியருக்கு யாகசாலை பூஜை, பிரவேசம், கும்ப மண்டல அலங்காரம், பாலகர் பூஜை, கங்கா பூஜை, அக்னி பிரதிஷ்டை,  விக்னேஸ்வரர் ஹோமம், சக்தி ஹோமம், ருத்ர ஹோமம் என வேத மந்திரங்களோடு மகாபூர்ண தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி திருக்கோயிலில் உள்ள விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேலாயுதபுரம் ஊர் பெரியோர்கள், கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post கண்டமனூர் அருகேசன்னாசி வலசலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Channasi Valasalingam Temple ,Kandamanur ,Varusanadu ,Maha Kumbabhishekam ceremony ,Sannasi Valasalingam Temple ,Velayuthapuram ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்