×

துறையூரில் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

துறையூர், செப்.3: துறையூர் அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய மர்ப நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துறையூர் அடுத்த கண்ணனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி்ல் கலைஞர் மகளிர் உரிமை தொகையை திட்டம் தொடர்பாக பயனாளியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஊராட்சி செயலாளர் பெண்களிடம் போன் செய்து தவறாக பேசுவதாக எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள் ஊராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியும், சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த துறையூர், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்து கிளார்க்குகள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் என 100க்கு மேற்பட்டோர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணியில் இருந்த நபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

The post துறையூரில் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : panchayat ,Thariyaur ,Panchayur ,
× RELATED வீட்டில் துப்பாக்கி பதுக்கி விற்பனை...