
திருப்பூர்,செப்.3: திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கோலப்போட்டி,பாசிங் பால் போட்டி, பைன்ட் ஹ ஐயம் போட்டி, கண்ணாம்பூச்சி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தேர்தல் துணை தாசில்தார் கலாவாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.