×

வலங்கைமானில்565 குவிண்டால் பருத்திரூ.36.84 லட்சத்துக்கு ஏலம்

வலங்கைமான், செப்.3: வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 565 குவிண்டால் பருத்தி ரூ.36.84 லட்சத்துக்கு ஏலம் போனது.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில்ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
சித்தன்வாளூர் வேளூர், மாத்தூர் விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையே சுமார் 250 ஏக்கர் வீதம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டடுள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கரில் கடந்த சில ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 8 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

அதனால் இந்தாண்டும் கூடுதலாக விலை கிடைக்கும் என்று அதிகளவில் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், வலங்கைமான்-நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறதுஇந்நிலையில் நடப்பு பருவத்திற்கான பருத்தி ஏலம் நேற்று முன்தினம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரமேஷ்(பொ) உத்தரவின்பேரில் நடைபெற்றது.பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர். 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7ஆயிரத்து 93 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5,809 க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூ.6ஆயிரத்து 480க்கும் ஏலம் போனது. பருத்தி மறைமுக ஏலத்தில் 565.98 குவிண்டால் ரூ.36.84 லட்சம் ஏலம் போனது விற்பனை கூட மேலாளர் வீராச்சாமி தெரிவித்தார்.

The post வலங்கைமானில்565 குவிண்டால் பருத்திரூ.36.84 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி