×

உப்பு நீரில் இருந்து நல்ல தண்ணீரை எவ்வாறு பிரிப்பது?

புதுக்கோட்டை. செப்.3: புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவ மாணவிகள் பல்வேறு வகையான படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். அதில் தற்போது வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த சந்திராயன் 3 விண்கலத்தை தத்ரூபமாக வடிவமைத்து வைத்திருந்தனர்.இதேபோல பண்டைய காலங்களில் வர்த்தகம் எவ்வாறு செய்யப்பட்டது. தற்பொழுது விஞ்ஞான வளர்ச்சியில் வர்த்தகம் எவ்வாறு செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்து எடுத்துக்காட்டும் விதத்தில் மாணவர்களின் படைப்புகளை செய்து வைத்திருந்தனர்.

இதேபோல உப்பு தண்ணீரில் இருந்து நல்ல தண்ணியை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்தும் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் நிலத்தடி நீரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். மனிதர்களுடைய இதயம் எவ்வாறு செயல்படுகிறது என பல்வேறு வகையான தத்ரூபமாக செய்யப்பட்ட படைப்புகளை கண்காட்சியில் வைத்து அசத்தினார். இந்த கண்காட்சியை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.

 

The post உப்பு நீரில் இருந்து நல்ல தண்ணீரை எவ்வாறு பிரிப்பது? appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Charles Nagar, Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த...