×

அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் சேவை: எம்.பி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்

தாம்பரம், செப்.3: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவைகளை டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட சில மாநகர பேருந்து சேவைகள் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்ததுடன், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகர பேருந்துகளின் சேவையை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகர போக்குவரத்து சேவையை துவங்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரிடம் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன்பேரில், நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் மாநகர போக்குவரத்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று பல்லாவரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர், 4 வழி தடங்களில் மீண்டும் பேருந்துகள் சேவையை துவக்கி வைத்தனர்.

இதில், குன்றத்தூர் – பிராட்வே இடையே இயக்கப்படும் (தடம் எண்: 60இ) மாநகர பேருந்து, அனகாபுத்தூர் தென்றல் நகர் – தாம்பரம் மெப்ஸ் வரை இயக்கப்படும் (தடம் எண்: எஸ்80) மாநகர பேருந்து, போரூர் – மணிமேடு (ஆகாஷ் நகர்) இடையே இயக்கப்படும் (தடம் எண்: எஸ்166) மாநகர பேருந்து, கவுல் பஜார் – கோயம்பேடு இடையே இயக்கப்படும் (தடம் எண்: 52ஜி) மாநகர பேருந்து ஆகியவற்றின் சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் துவங்கியது. நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், இ.எஸ்.பெர்னாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் சேவை: எம்.பி, அமைச்சர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,DR ,Balu ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக...