×

ஜெயங்கொண்டம் அருகேமாளிகைமேடு அகழாய்வு கண்டு வியந்த மாணவர்கள்

ஜெயங்கொண்டம்,செப்.3: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைமை இடமாகக் கொண்ட ராஜேந்திர சோழனின் மாளிகைகள் புதையுண்டு இருக்கும் மாளிகை மேடு அகழாய்வு பகுதிகளில் ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக சென்று பார்வையிட்டு வியந்தனர்.ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனின் தலைமை இடமாகக் கொண்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அகழ்வைப்பகம் மற்றும் அவற்றில் வைக்கப்பட்டுள்ள ராஜேந்திர சோழன் பயன்படுத்திய கருவிகள் சிலைகள் உள்ளிட்ட பொருட்களையும், மாளிகை மேட்டில் தொல்லியல் துறையினால் தோண்டப்பட்டு வரும் குழிகளையும் மேலும் அதன் உள்ளே இருந்து கிடைக்கப்பட்ட பொருட்கள் அமைக்கப்பட்ட இடங்களையும் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் பார்வையிட்டனர்.

தமிழ் ஆசிரியர் விஜயகுமார் தொல்லியல் அகழாய்வு பற்றிய விளக்கமும், சோழ தேசத்தின் பெருமையும் மாணவர்களிடையே விவரித்து கூறினார். கல்லூரி முதல்வர், ஒருங்கிணைப்பாளர், முதலாம் ஆண்டு ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அகழாய்வு பகுதிகளையும், மாளிகை மேட்டில் உள்ள சிற்பக் கூடத்தையும் கண்டு வியந்தனர். மேலும் இது போன்ற அகழாய்வு செய்யும் இடங்களை மற்ற பள்ளி கல்லூரி மாணவர்களும் பார்வையிட்டு ராஜேந்திர சோழனின் பெருமைகளை அறிய வைக்க வேண்டும். அப்போதுதான் ராஜேந்திர சோழனின் பெருமைகள் இந்த உலகிற்கு எடுத்துக் கூற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ஜெயங்கொண்டம் அருகேமாளிகைமேடு அகழாய்வு கண்டு வியந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Malikaimedu ,Jeyangondam ,Jayangkondam ,Rajendra Chola ,Gangaikonda Cholapuram ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...