×

தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி, செப்.3: இடைப்பாடி வெள்ளாண்டிவலசை நடுத்தெருவில் உள்ள திம்மராய பெருமாள், ஆஞ்சநேயர், புடவைக்காரி அம்மன், ஒப்பாட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று கல்வடங்கம், காவிரி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடத்தை எடுத்து ஊர்வலமாக வந்தனர். வெள்ளாண்டி வலசை காளியம்மன் கோயிலில் துவங்கி புதுப்பேட்டை, பழையபேட்டை வழியாக கோயிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை திருமலை தாசர் வகையார் செய்திருந்தனர்.

The post தீர்த்தக்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Thirtakuda Procession ,Ethapadi ,Perumal ,Anjaneyar ,Pudavaikari Amman ,Oppati Amman ,Kumbhaishek ,Ethapadi Vellandivalasai ,Theerthakuda Procession ,
× RELATED பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்?