
- மார்த்தாண்டம் இந்து
- மார்த்தாண்டம்
- சனாதன தர்மம்
- மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம்
- முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
- தின மலர்
மார்த்தாண்டம், செப்.3: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சனாதன தர்மத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாட்களுக்கு முன் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் மார்த்தாண்டத்தில் இரண்டு இடங்களில் திடீர் போராட்டங்களை நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் இந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜ மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவருமான ஜெயசீலன் உட்பட 103 பேர் மீதும், மார்த்தாண்டம் காளைச்சந்தை பகுதியில் போராட்டம் நடத்திய மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சந்திரசேகர் உட்பட 11 பேர் மீதும் என மொத்தம் 114 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மார்த்தாண்டத்தில் போராட்டம் இந்து அமைப்பினர் 114 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.