×

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவை கைப்பற்ற நடத்திய சட்ட போராட்டத்தில் தொடர் தோல்வியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பாக பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேற்று மதியம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ரஜினியுடனான இந்த திடீர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறப்பட்டாலும், எதிர்கால அரசியல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் இன்று காஞ்சிபுரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,Rajinikanth ,Boise Garden ,Chennai ,Rajinikanth O. Panneerselvam ,Boyes Garden House ,AIADMK ,
× RELATED கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு