×

காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்களையாவது பாஜவுக்கு இழுத்து பாருங்கள்: கர்நாடக அமைச்சர் சவால்

பெங்களூரு: 45 எம்எல்ஏக்கள் வேண்டாம் ; 4 எம்எல்ஏக்களை பாஜவுக்கு இழுத்து பாருங்கள் என அமைச்சர் பிரியங்க் கார்கே , பாஜவுக்கு சவால் விடுத்துள்ளார். பாஜ கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பிஎல் சந்தோஷ் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் , ‘கர்நாடகாவில் 45க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் பாஜவில் அவர்கள் இணைவர்’ என்று கூறியிருந்தார்.இதற்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 45க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜவுக்கு விரைவில் வந்துவிடுவர்என்றுபிஎல் சந்தோஷ் சமீபத்தில் கூறியிருந்தார்.

பாஜவின் இந்த புரளியை யாரும் நம்ப மாட்டார்கள். முடிந்தால் 45 எம்எல்ஏக்கள் வேண்டாம்; காங்கிரசில் இருந்து 4 எம்எல்ஏக்களை இழுத்து பாருங்கள். இந்த சவாலை ஏற்க பிஎல் சந்தோஷ் தயாரா? பிஎல் சந்தோஷ் கூறியது உண்மையாக இருந்தால் அதற்கு ஒரு நாள் அல்ல; ஒரு வாரம் அல்ல; ஒரு மாதம் அவகாசம் தருகிறோம். பிஎல் சந்தோஷ் கூறியது போல் அதை நிரூபித்து காண்பிக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்களையாவது பாஜவுக்கு இழுத்து பாருங்கள்: கர்நாடக அமைச்சர் சவால் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Karnataka Minister Saval ,Bengaluru ,Minister ,Priyank Kharge ,Congress party ,Karnataka ,Minister Sawal ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் காங்.கின்...