×

பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை மாற்றாமல் தொடர வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இப்போது மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது தமிழுக்கு செய்யும் அநீதியாகும்.பி.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பும், பி.லிட் படிப்பும் முற்றிலும் மாறுபட்டவை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பி.ஏ. தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் பி.லிட் படிப்பையும் பி.ஏ தமிழ் இலக்கியமாக மாற்ற வேண்டிய தேவையில்லை. எனவே, பி.லிட் படிப்புகளில் சிறப்புகளையும், அது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களையும் புரிந்து கொண்டு, பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழில் பெயர்பலகை வைக்காத கடைகளுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரிக்க மற்றொரு அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை மாற்றாமல் தொடர வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,Chennai ,B.M.K. ,Ramadas ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்