×

மாநில அரசுகள் லாஜிஸ்டிக் கொள்கை உருவாக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: வணிகம் செய்வதை எளிதாக்க உதவும் வகையில், சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்) கொள்கையை உருவாக்க வேண்டுமென மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் கதிசக்தி திட்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில், புதிய தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்நிலையில், கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது தொடர்பான தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில், தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையுடன் இணைந்த மாநில சரக்கு போக்குவரத்து கொள்கையை உருவாக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுவரை 22 மாநில அரசுகள் தங்களின் சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டுள்ளன. மேலும், மாநில மாஸ்டர் பிளானுக்கான இணையதளத்தில் தரவுகளை ஒருங்கிணைக்கவும் மாநிலங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

The post மாநில அரசுகள் லாஜிஸ்டிக் கொள்கை உருவாக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,New Delhi ,Union ,Union government ,Dinakaran ,
× RELATED மருத்துவ சாதனங்களை விற்க...