×

தடுப்பூசிகளை கண்காணிக்க ‘யு-வின்’ இணையம்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நோய் தடுப்பு மருந்துகளின் மின்னணு பதிவேட்டை பராமரிக்கும் ‘யு-வின்’ இணையம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பூசி மேலாண்மை அமைப்பின் கோ-வின் அடிப்படையில், ‘யு-வின்’ இணையம் இந்தியாவின் உலகளாவிய நோய் தடுப்பு திட்டங்களை டிஜிட்டல் மயமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘யு-வின்’ ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணையும் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை போடவும், குழந்தை பிறப்புகள், குழந்தைகளுக்கு வேண்டிய தடுப்பூசிகள், அடுத்து போட வேண்டிய தடுப்பூசிகளின் அளவு பற்றிய நினைவூட்டல், நேரம், தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக இது இருக்கும். இது தற்போது ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்பட்டு வருகிறது. விரைவில் இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post தடுப்பூசிகளை கண்காணிக்க ‘யு-வின்’ இணையம்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : U-WIN ,Union Govt. ,New Delhi ,Union Government ,U-VIN ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...