×

ஈரோட்டில் கனமழை வீட்டு சுவர் இடிந்து தாய்-மகன் பலி

ஈரோடு: ஈரோட்டில் கனமழைக்கு வீட்டின் மேல் தள சுவர் இடிந்து தாய், மகன் உயிரிழந்தனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (45). ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே பேக்கரி கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களது மகன் முகமது அஸ்தக் (13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் முதல் தளத்தில் மற்றொரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஈரோடு மாநகரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் கனமழை பெய்தது. மழை காரணமாக நேற்று அதிகாலை 4 மணியளவில் ஜாகீர்உசேன் வசிக்கும் வீட்டு மொட்டை மாடியின் சுவர் இடிந்து முதல் தளத்தில் விழுந்து பாரம் தாங்காமல் மேல்புற சுவர் இடிந்து தரைத்தளத்தில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா மற்றும் முகமது அஸ்தக் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி இருவரும் பலியாகினர். மழை காரணமாக இரவில் பேக்கரியில் தங்கியதால் ஜாகீர் உசேன் உயிர் தப்பினார்.

The post ஈரோட்டில் கனமழை வீட்டு சுவர் இடிந்து தாய்-மகன் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்தில்...