×

வீட்டைவிட்டு வெளியேறு விஜயலட்சுமிக்கு மிரட்டல்: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை: வீட்டை விட்டு வெளியேறுமாறு, நடிகை விஜயலட்சுமியை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகை விஜயலட்சுமிக்கு உதவியாக வீரலட்சுமி என்பவர் உடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜயலட்சுமியை வீட்டை விட்டு செல்லுமாறு வீரலட்சுமியுடன் இருக்கும் நபர் பேசுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று தற்போது வாட்ஸ்-அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வீரலட்சுமி அருகில் அமர்ந்திருக்கும் நபர், ‘‘உங்களுக்கு உதவி பண்றோம். எங்க வீட்ல இருந்துகிட்டு எங்களையே ரெக்கார்ட் பண்றீங்களா?.’’ என்று கேட்கிறார். ‘‘இல்ல சார்; நான் ஏன் போகணும்,’’ என விஜயலட்சுமி கூற, ‘‘எங்களால உங்கள பாத்துக்க முடியாது. உங்களுக்கு செலவு பண்ண முடியாது. எங்க வீட்ல இருந்துகிட்டு எங்க சாப்பாட சாப்பிட்டு, கிளம்ப வேண்டியது தானே; வேற என்ன பண்ண சொல்ற. நீங்க யாரிடம் வேணாலும் பேசுங்க, கிளம்புங்க,’’ என அந்த நபர் கூறுகிறார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை நடிகை விஜயலட்சுமி தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post வீட்டைவிட்டு வெளியேறு விஜயலட்சுமிக்கு மிரட்டல்: சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Chennai ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!