×

நிலவின் மேற்பரப்பில் ‘லூனா-25’ விழுந்த இடத்தில் 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா புகைப்படம் வெளியீடு

வாஷிங்டன்: நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. ஆனால் லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முன்பு கீழே விழுந்து நொறுங்கியது.

அந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

The post நிலவின் மேற்பரப்பில் ‘லூனா-25’ விழுந்த இடத்தில் 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Luna ,NASA ,Washington ,Russia ,India ,South Pole of the Moon.… ,Moon ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்