×

ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு விருது வேலூரில் வரும் 17ம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா

சென்னை: வேலூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கோலாகலமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. இந்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா-திமுக பவள விழா ஆண்டு திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. வேலூரில் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மிஞ்சூர் க.சுந்தரத்திற்கும் வழங்கப்படுகிறது. கலைஞர் விருது அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது பெங்களூர் ந.இராமசாமிக்கும் வழங்கப்படும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

The post ஐ.பெரியசாமி உள்ளிட்ட 5 பேருக்கு விருது வேலூரில் வரும் 17ம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : I. Periyasamy ,Vellore ,DMK ,CHENNAI ,Minister ,I.Periyaswamy ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...