×

ஆதித்யா- எல் 1 விண்ணில் ஏவப்பட்டது விண்வெளி சாதனையில் இந்தியாவின் மற்றொரு மைல்கல்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதித்யா-எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத உழைப்பாலும், முயற்சியாலும் இன்று முதன்முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஏவப்பட்டு சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. குறுகிய காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தயாரிப்பான ஆதித்யா- எல் 1 விண்ணில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்நிகழ்வு விண்வெளி சாதனையில் இந்தியாவின் மற்றொரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆதித்யா-எல்1 விண்கலத்தை உருவாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆதித்யா- எல் 1 விண்ணில் ஏவப்பட்டது விண்வெளி சாதனையில் இந்தியாவின் மற்றொரு மைல்கல்: ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,GK Vasan ,CHENNAI ,TAMAGA ,President ,Sriharikota ,ISRO… ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக...