×

அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை மாணவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, இயக்குநர் அறிவொளி, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘பள்ளிகளில் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் மிக கவனத்துடன் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பள்ளியில் மாணவர்களை கண்காணித்து களத்தில் நடப்பதை அறிந்து உடனடியாக அதை தடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பின்னணி குறித்து ஆராய்ந்து, அக்கறையுடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்து, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மூலமாக நிகழும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஆசிரியர்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு தேர்வுக்கான அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டும்’’ என்றார். பள்ளியில் மாணவர்களை கண்காணித்து களத்தில் நடப்பதை அறிந்து உடனடியாக அதை தடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

The post அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை மாணவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Anbil Mahesh Poiyamozhi ,Kotturpuram, Chennai ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...