×

பணக்கார நண்பர்களுக்காக திவால் சட்ட விதிகளை மீறும் மோடி அரசு: வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் கடும் கண்டனம்

டெல்லி: பிரதமர் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக திவால் சட்ட விதியையே மீறுவது வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு திவால் நடவடிக்கைகளை சந்தித்த தனியார் நிறுவனமான எஸ் வங்கி அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு வார கடன்களை வசூலிக்கும் ஒப்பந்தம் JC Flowers என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. எஸ் வங்கியில் ரூ.6,500 கோடி கடன் வாங்கியிருந்த ஜீ ஊடகத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திராவிடம் இருந்து வாரா கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் JC Flowers இருந்தது. இந்த நிலையில் கடன் தொகையில் இருந்து 75% தள்ளுபடி பெற்றுள்ள சுபாஷ் சந்திரா ரூ.1,500 கோடியை மட்டும் செலுத்திவிட்டு முடக்கப்பட்ட தனது சொத்துக்களை திரும்ப பெற்று கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பாஜகவிற்கு நெருக்கமானவர் என்பதால் உரிய கடனை திருப்பி செலுத்தாமல் சொத்துக்களை மட்டும் திரும்ப பெறுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியில் மூத்த தலைவர் பவன் கேராவின் சமூக வலைத்தள பதிவில் மோடியின் நண்பர்களாக திவால் சட்ட விதிகள் மீறப்படுவது வெட்கக்கேடான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விதி மீறல்களை மறைக்கவே ஒரு சில செய்திகள் மூலம் மக்களின் கவனத்தை பாஜக திசை திருப்பி வருவதாக கூறியுள்ளார்.

The post பணக்கார நண்பர்களுக்காக திவால் சட்ட விதிகளை மீறும் மோடி அரசு: வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi government ,Delhi ,PM Modi ,Modi ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு