×

மரம் அறுக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து

ஓசூர்: ஓசூர் அருகேயுள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள உளியாளம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் இருந்த மரம் அறுக்கும் இயந்திரம், விலை உயர்ந்த மரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுபற்றி ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post மரம் அறுக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,
× RELATED ஒசூர் அருகே குட்டியை ஈன்ற தாய் யானை...