×

நடிகை விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு ஊடகங்கள் குப்பை மேட்டில் குடியிருப்பதாக சீமான் விமர்சனம்..!!

உதகை: தன்னுடைய அரசியல் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அவதூறு பரப்புகின்றனர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், உதகை செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது; கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புவது கேவலமான அரசியல்.

திருமண புகைப்படத்தை வெளியிட விஜயலட்சுமி தயாரா?
நான் திருமணம் செய்ததாக கூறும் விஜயலட்சுமி, அதற்கான LIVE -புகைப்படம் இருந்தால் வெளியிடட்டும்.
விஜயலட்சுமி புகார் தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. கன்னட நடிகர் ஜெகதீஸ் உள்பட 10 பேர் மீதும் புகார் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மக்கள் ரசிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

நான் வெடித்து சிதறினால் கட்சிகள் தாங்காது – சீமான்
ஒருநாள் இல்லை ஒருநாள் நான் வெடித்து சிதறினால் கட்சிகள் தாங்காது. 13 ஆண்டாக இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறேன்; சமூக மரியாதை உள்ள தன்மீது அவதூறு பரப்புவதை பொறுக்கமுடியாது என்று சீமான் கூறினார்.

பத்திரிகையாளர்கள் மீது சீமான் பாய்ச்சல்
நடிகை விஜயலட்சுமி குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் நேரடியாக பதில் சொல்லாமல் ஊடகங்கள் குப்பை மேட்டில் குடியிருப்பதாக விமர்சனம் செய்துள்ளார். இவ்வாறு உதகை செய்தியாளர் சந்திப்பில் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

 

The post நடிகை விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு ஊடகங்கள் குப்பை மேட்டில் குடியிருப்பதாக சீமான் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Seeman ,Vijayalakshmi ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...