×

செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு

சென்னை : திமுக. முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பினை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா – தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் வேலூரில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான

பெரியார் விருது
மயிலாடுதுறை திரு. கி.சத்தியசீலன் அவர்கட்கும்

அண்ணா விருது
மீஞ்சூர் திரு. க.சுந்தரம் அவர்கட்கும்

கலைஞர் விருது
மாண்புமிகு. ஐ. பெரியசாமி அவர்கட்கும்

பாவேந்தர் விருது
தென்காசி திருமதி. மலிகா கதிரவன் அவர்கட்கும்

பேராசிரியர் விருது
பெங்களூர் திரு. ந.இராமசாமி அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செப்.17-ல் வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Mupperum ,Vellore ,Chennai ,Triennial Awards ,
× RELATED சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி...