×

விளமல் தொடக்கப்பள்ளியில் கற்றல் மையம் துவக்கம்

 

திருவாரூர், செப். 2: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், விளமல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கற்றல் மையத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிபாய் தொடங்கி வைத்தார். திருவாரூர் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், முற்றிலும் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வழங்கும் வகையில், விளமல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் கற்றல் மையத்தை, மாநில ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிபாய் தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் பழனிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், இல்லம் தேடி கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் நாடிமுத்து, பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விளமல் தொடக்கப்பள்ளியில் கற்றல் மையம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Vilamal Primary School ,Tiruvarur ,Vilamal Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு;...