×

விண்ணமங்கலத்தில் பனை விதை நடும் பணி

 

திருக்காட்டுப்பள்ளி, செப்.2: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளக்கரைகளில் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுடன் இணைந்து பனை விதைகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் கனிமொழி, முத்தமிழ் செல்வி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பூதலூர் வட்டாட்சியர் பெர்சியா, ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விண்ணமங்கலத்தில் பனை விதை நடும் பணி appeared first on Dinakaran.

Tags : Vinnamangalam ,Thirukkatupalli ,Thirukkatupalli, Thanjavur district ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...