×

டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி பணம் இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தகவல்

 

தஞ்சாவூர், செப். 2: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஏபிஎம் நகர் பகுதியில் சேர்ந்த முகம்மது பாரூக் என்பவரின் மகள் பைரோஜ் நிசா. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாபநாசம். ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியில் வசிக்கும் முகம்மது ஹனிபா மகள் முஸ்தபா என்பவர் வந்து தான் HAMAD TRANSPORT என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறேன். அதில் முதலீடு செய்தால் நிறுவனத்தின் லாபத்தொகையில் அதிக பங்கு தருவதாகவும் இரண்டு வருடத்தில் முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.1.00.000-த்தை பெற்றுக்கொண்டார்.

எனவே முஸ்தபா பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் தனது பணத்தை மீட்டுத்தருமாறு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது தஞ்சாவூர் பொருளாதார குற்றபிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் வழக்கில் முஸ்தபா என்பவரிடம் HAMAD TRANSPORT என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகைகள் திருப்பி தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

The post டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி பணம் இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Mohammad Farooq ,ABM Nagar ,Papanasam Taluk Rajagiri, Thanjavur District ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...