புதுக்கோட்டை. செப். 2: அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பணிபுரியும் முதல்வர் (பொறுப்பு) நாகேஸ்வரன், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து மாணவி அனிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இதில் நீட் தேர்வுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் திமுகவினரும் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களும் அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
The post அரியலூர் மாணவி அனிதா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.