×

உடையார்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார கூட்டம்

 

ஜெயங்கொண்டம்,செப்.2: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் தெற்கு தெருவில், உடையார்பாளையம் பேரூராட்சி திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. உடையார்பாளையம் பேரூராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் மலர்மன்னன் கலந்து கொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர், உடையார்பாளையம் பேரூர் கழக அவைத்தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர்கள் ராணி சின்னதுரை, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் தங்கராசு, துருவேந்தன், ஒன்றிய பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், காமராஜ், ராசெந்தமிழ்செல்வன், முன்னாள் செயலாளர் ஆறுமுகம், சதாசிவம், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தெய்வநிதி, முகமது பாரூக், மாரியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post உடையார்பாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Celebration street campaign ,Vodiyarpalayam ,Jayangkondam ,Jayangkondam Legislative Assembly Constituency ,Udaiyarpalayam South Street ,Udaiyarpalayam ,Municipality DMK ,Udaiyarpalayam artist centenary street campaign meeting ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு...