
பெரம்பலூர்,செப்.2: பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் விநியோகம் இன்று (2ம்தேதி) முதல் 4ம்தேதி வரை 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் இன்று (2ம் தேதி) முதல் வருகிற 4ம் தேதி முடிய மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே இன்று (2ம் தேதி) முதல் வருகிற 4ம் தேதி முடிய மூன்று தினங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்கிற விபரம் பெரம்பலூர் நகராட்சி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.