பரமக்குடி, செப். 2: அரியனேந்தல் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியனேந்தல் கிராமத்தில் பூங்கா நகர் செல்லும் சாலை சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை உதவி பொறியாளர் முத்து கலாதேவி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியனேந்தல் பஞ்சாயத்து கடந்த 2022-ம் ஆண்டுக்கான பசுமை கிராமமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ரூ.15 லட்சம் மற்றும் விருதினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பூங்கா நகர் செல்லும் சாலை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மட்ட மின் விளக்கு அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து வருவதாக பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் தெரிவித்தார்.
The post பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.