×

மதுரை மாநகர் திமுக மாணவரணி சார்பில் அனிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை

மதுரை, செப். 2: நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதா நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் அனிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மூவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசெல்வம், மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், மண்டல தலைவர் முகேஷ்சர்மா, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.ஆறுமுகம், முத்துகணேசன்,

மாநகர் மாணவர் அணி அமைப்பாளர் டி.துரைகோபால்சாமி, மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் சவுந்திரராஜன், மாணவரணி துணை அமைப்பாளர் முத்துமோகன், மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் காவேரி சொக்கலிங்கம், துணை தலைவர் முத்தையா, மாநகர் நெசவாளர் அணி அமைப்பாளர் வெள்ளைத்துரை, பகுதி செயலாளர்கள் அறிவுநிதி, சுதன், மாநகர் விளையாட்டு அணி துணை அமைப்பாளர் துபாய் நாகராஜ், வட்ட செயலாளர்கள் வேலு, ராஜேஷ், காத்தவராயன், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரை மாநகர் திமுக மாணவரணி சார்பில் அனிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : dizhagam manuvarani ,madurai ,Memorial Day of ,Anita ,Malarduvi ,Madurai Munnagar Dizhagagam ,Studentani ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...