×

மதுரை ஜிஹெச்சில் செல்போன் திருடியவர் கைது

 

மதுரை, செப். 2: சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் சங்கர் (55). இவரது மகள் செல்வராணி. இவர் பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த ஆக.21ம் தேதி சேர்க்கப்பட்டார். செல்வராணிக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கிய சங்கர், கடந்த ஆக.27ம் தேதி இரவு அங்குள்ள பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தூங்கி உள்ளார்.

அப்போது, அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் திருடப்பட்டது. இதுகுறித்து சங்கர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், செல்போனை திருடிய மதுரை தத்னேரி கணேசபுரத்தை சேர்ந்த விமல்ராஜ் (42) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மதுரை ஜிஹெச்சில் செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai GH ,Madurai ,Shankar ,Cholavantan Govindammal Street ,Selvarani ,Dinakaran ,
× RELATED மதுரை ஜிஹெச் இருதயவியல் துறை மாணவர்களுக்கு பயிற்சி முகாம்