×

உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் சிவன் கோயில் நிலம் 8 ஏக்கர் மீட்பு

உசிலம்பட்டி, செப். 2: உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செடி, கொடிகள், முட்கள் அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கோயிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதுகுறித்து வருவாய் துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வருவாய் துறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் முன்னிலையில் நிள அளவை அதிகாரிகள் மூலம் கோயில் நிலம் அளவீடு செய்யப்பட்டு சுமார் 8 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் அளவு கல் நடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் வினோத் கண்ணன், தமிழ் தேசிய பார்வர்ட் கட்சி ஐடிவிங் மாநில தலைவர் தவசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

The post உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் சிவன் கோயில் நிலம் 8 ஏக்கர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Shiva temple ,Usilampatti Thottapanayakanur ,Usilampatti ,Shiva ,Thottapanayakanur ,Usilambatti ,
× RELATED (வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை...