×

தனி பெயர்ச்சி திட்டம்

போச்சம்பள்ளி, செப்.2: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் முதலிய பாடங்களை மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு தனி பெயர்ச்சி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாசுதேவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அவர்களுக்கு தனியாக ஆசிரியர்களை நியமித்து அனைத்து பாட வேலைகளிலும் அடிப்படை திறன்கள் மற்றும் முழு கவனம் செலுத்தி அவர்களை சரளமாக தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை வாசிக்கவும், கணித அடிப்படை பயிற்சிகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலாக திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு இப்பயிற்சி அமைய உள்ளது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சின்னராஜ், ஆசிரியர்கள் சபாபதி, ஆன்சிமேரி, சக்திவேல், சகாதேவன், ஆசிரியர் பயிற்றுனர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தனி பெயர்ச்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Mathur Govt Boys High School ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு