×

ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் மோடியின் பதில் என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி

தஞ்சாவூர்: மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு அலுவலகங்களில் 10 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை நாள் குறையும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் வரிகளை அதிகமாக போட்டுக்கொண்டே இருப்பதால் அதன் விலை குறையவில்லை.

உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது நியாயமல்ல. கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்குகிறது. 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அரசு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குப் பிரதமர் பதில் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் மோடியின் பதில் என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Marxist ,Thanjavur ,Mark Cist ,Communist Central Committee ,Vasuki ,Union government ,Dinakaran ,
× RELATED என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்,...