×

லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதி லைசென்ஸ் முறை எளிதாக்க முடிவு: வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தகவல்

புதுடெல்லி: லேப்டாப், பர்சனல் கம்ப்யூட்டர், மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட கம்ப்யூட்டர் வகைகளை இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இது அமுலுக்கு வர உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக அதிகாரி கூறுகையில்,‘‘லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் இறக்குமதி செய்வதற்கான லைசன்ஸ் வழங்கும் நடைமுறைகள் எளிதாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

முன்பு இது போன்ற நிகழ்வுகளில் கம்பெனியின் முந்தைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் வழங்கப்பட்டது. இறக்குமதி கட்டுப்பாடுகளால் எந்தெந்த பகுதிகளில் இருந்து பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன என்பதை கண்காணிக்க உதவும்’’ என்றார்.சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் ஏற்றுமதி ரூ.13 லட்சத்து 48 ஆயிரம் கோடி ஆகும். இதில், 81 சதவீத பங்கை சீனா கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 3.5 சதவீத பங்குடன் ஜெர்மனி 2ம் இடத்தில் உள்ளது.

The post லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதி லைசென்ஸ் முறை எளிதாக்க முடிவு: வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Directorate of Foreign Trade Information ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண்,...