
சென்னை: ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து பணியாளர் நலத்துறையின் குழு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன், ஒன்றிய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராகவும்,
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறை செயலாளராகவும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசு பணிக்கு 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் appeared first on Dinakaran.