×

கவுதம சிகாமணி எம்பி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த வழக்கை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 2வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The post கவுதம சிகாமணி எம்பி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Gautama Chikamani ,Chennai ,Tamil Nadu Higher Education ,Minister ,Ponmudi ,Kallakurichi Constituency ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...