×

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்கும் 5 மாநில தேர்தல், எதிர்கட்சிகளின் வலுவான ‘இந்தியா’ கூட்டணி ஆகியவற்றால் ஒன்றிய பாஜக அரசு தடுமாறி வருகிறது. இந்தியா’ கூட்டணியின் வலுவான வியூகத்தால் ஆளும் பாஜக தடுமாறி வரும் நிலையில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஓரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கால விரயம், செலவு தவிர்க்கப்படும். மக்களவை மற்றும் மாநிலத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு, கூடுதல் நிதி செலவாவதையும் கட்டுப்படுத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், இது சிறந்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஜனநாயக பங்கேற்புக்கு வழிவகுக்கும் என்றும் எடப்பாட் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அமைக்கப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Addapadi Palanisamy ,Chennai ,Union ,Edapadi Palanisami ,
× RELATED வங்கி கடன் பாக்கிக்காக வீட்டை ஜப்தி...