×

திருப்பத்தூரில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி கிலோ ரூ.2 விற்பனை: சாலையில் வீசி செல்லும் விவசாயிகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் கிலோ ₹2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட வெண்டைக்காயை விவசாயிகள் சாலையில் வீசி செல்கின்றனர். திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எலவம்பட்டி, வெலக்கல் நத்தம், நாட்றம்பள்ளி, குறும்பேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் பயிரிட்டு இருந்தனர். தற்போது இந்த வெண்டைக்காய் தரத்திற்கு வந்து அறுவடை ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து அறுவடை செய்யப்பட்ட வெண்டைக்காய்கள் நாள்தோறும் சுமார் 2 டன் கணக்கில் கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது.

தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நடைபெற்று வருவதால் காய்கறி ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் அறுவடை செய்யப்பட்ட வெண்டைக்காய்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல டன் அளவில் தேங்கி கிடக்கிறது. வெண்டைக்காயின் அறுவடை அதிகரிப்பால் ஒரு கிலோ வெண்டைக்காய் திருப்பத்தூர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெண்டைக்காயின் அதிரடி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த வெண்டைக்காய்கள் அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் விவசாயிகள் சாலையில் வெண்டைக்காய்களை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.

மேலும் இது குறித்து வெண்டை விவசாயிகள் கூறுகையில். வெண்டைக்காய் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளோம் விலையின் வீழ்ச்சி ஏற்பட்டு ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் எங்களுக்கு அறுவடை செய்யும் கூலிக் எங்களுக்கு கிடைப்பதில்லை வெண்டைக்காயை அறுவடை செய்ய நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 200 ரூபாய் விதம் வழங்குகிறோம் அதில் விலல விழ்ச்சி இரண்டு ரூபாய்க்கு செல்கிறது. இதனால் நாங்கள் வெண்டை பயிர் செய்யப்பட்டு தற்போது நஷ்டத்தில் இருந்து வருகிறோம்.

அதேபோல் பயிரிடப்பட்ட வெண்டைக்காய்கள் நாள் அதிகரிக்கும் போது அது இளசாக இருக்கும் வெண்டைக்காய்கள் முதிர்ச்சி அடைந்து விடுகிறது இதனால் சமையலுக்கு பயன்படுத்த முடியாத சூழலும் ஏற்படுகிறது.எனவே இந்த வெண்டைக்காய்களை வியாபாரத்திற்கும் கொண்டு செல்லாத முடியாத காரணத்தினால் சாலையிலும் அருகே உள்ள ஏரிகளிலும் கால்நடைகளுக்கும் இந்த வெண்டைக்காய்களை வீசும் நிலை ஏற்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் வெண்டை விலை வீழ்ச்சியால் வெண்டை விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான வெண்டை விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட வெண்டைக்காய்களை நாள்தோறும் டன் கணக்கில் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர் தற்போது வெண்டை க்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது கிலோ வெண்டைக்காய் தற்போது மார்க்கெட்டில் ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது அதேபோல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இருந்த வெண்டைக்காய்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் வெண்டையின் வவிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஓரிரு நாட்களில் மீண்டும் ஏற்றுமதி பணிகள் நடைபெறும் காரணத்தினால் வெண்டைக்காய் மீண்டும் விலை சூடு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நாள்தோறும் அறுவடை செய்யப்படும் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு உணவளித்தது போக மீதம் உள்ளதை அருகே உள்ள ஏரி பகுதிகளிலும் சாலைகளிலும் கொட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post திருப்பத்தூரில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி கிலோ ரூ.2 விற்பனை: சாலையில் வீசி செல்லும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Thiruppatur ,Tirupattur ,Thirupatur ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...