×

டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தர் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக வரும் 12ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின், பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். ெடல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. மிஸ்ரா முன்பு இடைக்கால ஜாமீன் நீடிப்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது உடல்நிலை காரணமாக சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை வரும் 12 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் நீடிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,minister ,Satyender Jain ,Supreme Court ,New Delhi ,Ex ,Dinakaran ,
× RELATED நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் முன்பு...