×

சென்னை மெட்ரோ ரயில்களில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் பேர் பயணம்

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையாகும்.

அதன்படி, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல, அதிகபட்சமாக கடந்த மாதம் 11ம் தேதி 3,29,920 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், 2023, ஜூலை மாதத்தில் மட்டும் க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 31,05,583 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 47,56,951 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,26,491 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,685 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 3,95,267 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

The post சென்னை மெட்ரோ ரயில்களில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 85.89 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,Chennai Metro Rail Administration ,Chennai Metro Rail Corporation ,
× RELATED பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை...