×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அல்கராஸ் ஜெசிகா பெகுலா வெற்றி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-3, 6-2 என இங்கிலாந்தின் ஜோடி அன்னா பர்ரேஜை வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 5-7, 6-4, 6-4 என ரஷ்யாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 6-2 என பெல்ஜியத்தின் யானினா விக்மேயரையும், ரஷ்யாவின் டாரியா கசட்கினா, 2-6, 6-4, 6-4 என அமெரிக்காவின் கோபியா கெனினையும் வீழ்த்தினர். செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா, மேரி பௌஸ்கோவா உள்ளிட்டோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர். 3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகாபெகுலா 6-3, 6-1 என எளிதாக ருமேனியாவின் பாட்ரிசியா மரியாவை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-1, 7-6 என தென்ஆப்ரிக்காவின் லாயிட் ஹாரிவை வீழ்த்தினார். ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி, டான் எவன்ஸ், அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேஸ் ஆகியோரும் 2வது சுற்றில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அல்கராஸ் ஜெசிகா பெகுலா வெற்றி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Algaraz ,Jessica Pegula ,New York ,US Open ,Grand Slam ,Alcaraz ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்