×

போடி அருகே மும்முரமாக நடைபெறும் நெல் சாகுபடி பணி: முல்லைப் பெரியாறு நீர்வரத்தால் நடவு பணி தீவிரம்

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே குச்சனூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை தொடங்கி கூழையனூர், குச்சனூர், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் விலை நிலங்கள் இருக்கின்றன. இங்கு நெல் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அந்த வகையில் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி தொடங்கி இருக்கிறார்கள்.

இது தவிர தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் உற்சாகமடைந்த இருக்கும் விவசாயிகள் நடவு மற்றும் உழவு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போது உப்புக்கோட்டை, குச்சனூர், கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இடைப்பட்ட காலங்களில் உளுந்து, பாசிப்பருப்பு, தட்டாம் பயிர், வெள்ளரி, மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

The post போடி அருகே மும்முரமாக நடைபெறும் நெல் சாகுபடி பணி: முல்லைப் பெரியாறு நீர்வரத்தால் நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni ,Kuchanur ,Kudalur ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்