×

வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோலியா. 23 வயதாகும் இவருக்கும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மனோலியாவை சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது.

வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்வதாக கணவர், மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா புகார் மனு அளித்தார். அதன் பேரில் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, மருமகள் மனோலியா அளித்த வரதட்சணை கொடுமை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்ஜாமின் கோரி கணவர் சங்கர், அவரது தந்தை சதாசிவம் எம்எல்ஏ, தாய் பேபி, சகோதரி கலைவாணி மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் முன்ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையை செப்.7-ம் தேதிக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

The post வரதட்சணை கொடுமை புகாரில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்திற்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Bamaka M. l. PA ,Sathasivam ,Chennai ,Bamaka M. ,l. PA ,Sadasivam ,Igort. ,Salem Suramangalam ,Dinakaran ,
× RELATED சுசீந்திரத்தில் 2011ம் ஆண்டு இரட்டை கொலை...