×

பூலித்தேவன் அவர்களது 308-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை: பூலித்தேவன் 308-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755ம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.

இதனால், இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் கட்டமாட்டோம். இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.

இந்நிலையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மாவீரர், நெற்கட்டான் செவல் மாமன்னர் பூலித்தேவன் அவர்களது 308-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது x தளத்தில் பதிவிட்டதாவது; ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மாவீரர், நெற்கட்டான் செவல் மாமன்னர் பூலித்தேவன் அவர்களது 308-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களுடன் இன்று நெற்கட்டான் செவலில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரது விடுதலை உணர்வையும், துணிவையும், தியாகத்தையும் போற்றிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post பூலித்தேவன் அவர்களது 308-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை! appeared first on Dinakaran.

Tags : poolitevan ,government of tamil nadu ,Chennai ,Thiruvuruva ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...